Saturday, April 26, 2008

சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?

சிலர் கோயிலுக்கு வந்தால் தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்கின்றனர்.

இவை தெரியாத சிலர் “சுவாமி பெயருக்குச் செய்யுங்கள்” என்கின்றனர்.
இதில் எது சரியான முறை தெரியுமா?

எந்தச் செயலைத் தொடங்கினாலும், “இறைவன் திருவருளை முன்னிட்டு இன்ன நன்மைக்காக, இன்னாருடைய விருப்பத்தின் பொருட்டு, இதைத் தொடங்குகிறேன்” என்று இறைவனிடம் விண்ணப்பிப்பதே அர்ச்சனையின் நோக்கம்.

இதையே ‘சங்கற்பம் செய்து கொள்ளுதல்’ என்று சொல்கிறார்கள்.

ஆகவே நமது பெயருக்குத்தான் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இதுதான் முறை என்கிறார்கள் பெரியோர்கள்.

No comments: