Saturday, April 26, 2008

நரசிம்மருக்கு இப்படியும் ஒரு பெயர்


சித்தர்களில் ஒருவரான இடைக்காடரிடம் சில பக்தர்கள் பெருமாளின் அவதாரங்களில் உங்களுக்குப் பிடித்த மூன்று அவதாரங்களைச் சொல்லுங்கள். அவரையே நாங்கள் வழிபட விரும்புகிறோம்” என்றனர்.


உடன் இடைக்காடர் அவர்களிடம் “ஏழை, இடையன், இளிச்சவாயன்.. இவர்களை வணங்கி திருவிழா கொண்டாடுங்கள்.. உங்களைத் துன்பம் நெருங்காது..” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.


அவர் சொல்லியதன் விளக்கம் இதுதான்.


‘ஏழை’ என்பது ராமனையும், ‘இடையன்’ என்பது கண்ணனையும், ‘இளிச்சவாயன்’ என்பது நரசிம்மரையும் குறிக்கும்.


ராமன், தசரத சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்தவர். ஆனாலும், தந்தையின் சொல் கேட்டு வனவாசம் சென்று ஏழையாகவே வாழ்க்கை நடத்தினார்.


அவரே கிருஷ்ணாவதாரத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாகப் பிறந்தார்.


நரசிம்ம அவதாரத்தில் உக்கிரத்துடன் தன் வாயைத் திறந்து இரணியனை சம்ஹாரம் செய்தார். இதை ‘இளித்தவாயன்’ எனக் குறிப்பிட்டார். ‘இளித்த’ என்றால் ‘வாயைத் திறந்த’ என்றும் பொருள் உண்டு.

No comments: