Saturday, April 26, 2008

விடங்கலிங்கம் கதை தெரியுமா?

சிவலோகத்தில் சிவனின் விடங்க லிங்கம்(மிகச் சிறிய லிங்கம்) இருந்தது. இது பூலோகத்திலும் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார்.

இந்திரன் ஒரு முறை சிவனின் விடங்க லிங்கத்தை யாசித்தான். இந்த லிங்கத்தை யோக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் அதை அவனிடம் கொடுத்துவிட்டார்.

அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான்.

ஒரு சமயம் இந்திரன் வாலாசுரன் என்ற அசுரனைக் கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஐராவத யானை, வெண்குடை நீங்கலாக எதைக் கேட்டாலும் தருவதாகச் சொல்லியிருந்தான்.

பூலோகத்தை ஆட்சி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி, வாலாசுரனை அழிக்க இந்திரனுக்கு உதவி செய்தார்.

தான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “அவருக்கு என்ன வேண்டும்” என்று கேட்டான் இந்திரன்.

அவர் இந்திரனிடம் சாமர்த்தியமாக அவன் தினமும் பூஜை செய்யும் விடங்க லிங்கத்தைக் கேட்டார்.

இந்திரனோ, நிஜ லிங்கத்திற்கு பதிலாக முசுகுந்தனை ஏமாற்றி வேறு 6 லிங்கங்களை கொடுத்தான்.

இதையறிந்த முசுகுந்தன் விடங்க லிங்கத்தை அவன் தரவில்லை என்பதை தாரத்துடன் நிரூபித்து, வாக்குக் கொடுத்தால் அதன்படி சரியாக நடக்க வேண்டும் என்று இந்திரனை எச்சரித்து விடங்க லிங்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந்த ஏழு லிங்கங்களை திருவாரூரைச் சுற்றியுள்ள ஏழு கோவில்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் முசுகுந்தன்.

No comments: